ஏப்.,22 மாலை நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது,' கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டவர்கள். மீதி பேருக்கு தொடர்பு மூலம் பரவி உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 437 ஆக உள்ளது. இதில் 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மாநிலத்தில் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால், அதை சரிக்கட்ட அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தில் ஆறு நாட்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும். ஆனால் 20,000க்கு குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு பொருந்தாது. அதே நேரம் மந்திரிகள் எம்.எல்.ஏ., க்களின் சம்பளத்திலிருந்து 30 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்
27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்